திமுக மற்றும் அதிமுகவுடன் நோ கூட்டணி – ராமதாஸ் அதிரடி

54

பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஆளும்கட்சியின் அலங்கோலங்களைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த தமிழகமே தலைகுனிந்து நிற்பதினையே பார்க்க முடிகிறது. தற்போது ஆட்சியும் நடக்கவில்லை.

அரசும் செயல்படவில்லை. இப்போது போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதெல்லாம் சந்தேகம்தான். தமிழக ஆளுநர் போல இந்தியாவில் இப்படி ஒரு ஆளுநர் வேறு எங்கும் இருப்பாரா என்பது சந்தேகமே.ஆளுநரை இயக்குவது யார் என்று தெரியவில்லை.

‘நீட்’ தேர்வு கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் என்று நாங்கள்தான் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை. அவர்கள் சார்பாக நடைபெறும் போராட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டோம். பா.ம.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி மாநாடு நடைபெறும். இந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.