லண்டனில் குண்டு வெடிப்பு

61

தென் மேற்கு லண்டன் புல்ஹாம் (Fulham) பிரதேசத்தில் உள்ள பாசன்ஸ் கிரீன் (Parsons Green)  சுரங்க தொடரூந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பல பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடரூந்து நிலையத்தை விட்டு காயப்பட்ட பயணிகள் பதற்றத்துடன் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் காவல்துறையினரும், தீயணைக்கும் படைத்தரப்பினரும் நிலைமையினை கண்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.