தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்

53

ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடந்த சில தினங்களாக சென்னை மெரீனா பகுதியில் உள்ள எழிலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இருப்பதாக சென்னையில் நடைபெற்ற தலைமைச்செயலக சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைபெற உள்ள போராட்டத்தில் 4,500 பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கேயே உடைமைகளுடன் தங்கினர். இன்றைய விசாரணையில் தமிழக அரசு தங்களுக்கு சாதகமான முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.