திமுகவுடன் கூட்டணியா ? வாயை புலக்கும் தினகரன்

60

பழனிசாமி அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தினகரன் சார்பில் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பிலும் இது தொடர்பான ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரண்டு வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வரும் 20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்பட்டதால் திமுகவுடன் கூட்டணியா? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய தினகரன், “நேற்று எதார்த்தமாக இரு வழக்குகளும் சேர்ந்து விசாரிக்கப்பட்டது. இதற்காக தி.மு.க-வுடன் கூட்டணியா? என கேட்பது என்ன நியாயம்? தி.மு.க எங்களது பிரதான எதிர்க்கட்சி.

தி.மு.க-வுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்த விதமாக கூட்டணியும் இல்லை என்பதை தெளிவாக கூறி கொள்கிறேன். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் அ.தி.மு.க-வுக்கு துரோகம் செய்தவர்கள். இ.பி.எஸ், எங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை நீக்குவதற்கு குறுக்கு வழியில் யோசிக்கிறார். அ.தி.மு.க அரசியல் பிரச்னைகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.