எடப்பாடி சபாநாயகர் தனபாலுடன் மீட்டிங்

60

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.விசண்முகம் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சென்னை உயர்நீதிமன்றம், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடப்பதாகக் கூறப்படுகிறது.