ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெறும் வன்முறை

125

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளை உறுதிப்படுத்தும் வகையிலான செய்மதிப் படங்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.

ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளுக்கு, பாதுகாப்பு படையினர் தீ வைக்கின்றமை இந்த படங்களில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மன்னிப்பு சபை இந்த படங்களை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தாங்கள் தீவிரவாதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை நடத்துவதாக மியன்மார் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதக் காலப்பகுதியில் 3 லட்சத்து 80ஆயிரத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள், பங்களாதேஸுக்கு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.