ஓவியா ஓகே சொல்லிட்டாங்க…

259

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இதுவரை யாருக்கும் பிடிகொடுக்காமல் இருந்த ஓவியா, சினிமா சம்மந்தமில்லாத ஒருத்தருக்கு மட்டும் ஓ.கே. சொல்லியுள்ளார்.

அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு தெரியுமா? கேட்டதும் மயக்கம் போட்றாதீங்க மக்களே, மனச திடப்படுத்திக்கோங்க! சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கூட நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் ஓவியா.

சினிமாவைக் காட்டிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவின் செய்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஒரே நிகழ்ச்சி மூலமாக ஓவியாவின் புகழ் உச்சத்துக்குப் போனது. ஓவியா ஆர்மியை உருவாக்கி அவரைக் கொண்டாடுகிறது இளைஞர் படை.

அவர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் ட்விட்டரில் ஓவியா ஆர்மி இன்னும் ஆக்டிவாக உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா திரும்பி வர மாட்டாரா? என ஆர்மிக்காரர்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.

இப்படி ஓவியாவின் மார்க்கெட் சகட்டு மேனிக்கு ஏறிக்கிடப்பதால்; அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால், இதுவரை யாருக்கும் பிடிகொடுக்காமல் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார் ஓவியா.

இந்நிலையில், சினிமாக்காரர்களுக்கு சிக்காத ஓவியாவை வலை வீசிப் பிடித்திருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள்!

தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள ஓவியா, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் ஓவியாவுடன்; சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி அருளும் நடிக்கிறார்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி அருள் ஏற்கவனவே; நடிகைகள் தமன்னா, ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் வந்தார். பின்னர் தனியாக அவரே விளம்பரத்தில் நடித்தார். தற்போது ஓவியாவுடன் நடிக்க உள்ளார்.

இந்த விளம்பரத்தை; ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு பிடித்த மாதிரியும், அதே நேரத்தில்; ஓவியாவுடன் தான் நெருக்கமாக இருக்கும்படியும் எடுக்குமாறு உத்தரவு போட்டிருக்கிறார் அண்ணாச்சி.