பொங்கலுக்கு டிக்கெட் புக்கிங் ரெடி

59

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் ஆரம்பமாக உள்ளது. பொங்கல் பண்டிகை போன்ற தொடர் விடுமுறை நாட்களின் போது சென்னையில் பணி புரியும் பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இவ்வாறு செல்லும் பயணிகளின் வசதிக்காக பொங்கல் பண்டிகைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் படி பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்குகிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையானது 14-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வர உள்ளது. இதனால் பலரும் 12-ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆரம்பித்து விடுவர். இதனால் 12-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் இன்றும், 13-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் நாளையும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 18-ஆம் தேதி துவங்குகிறது.