ஈராக் : தற்கொலை படை தாக்குதல் – 75 பேர் பலி

54

அமெரிக்க படையினரின் அதிரடி தாக்குதல்களால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கடுமையாக  போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் திகார் மாகாணத்தில் நசிரியா பகுதியில் சாலையோர உணவகம் ஒன்றில் இன்று தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைந்தான். அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால்  சுட தொடங்கினான். இதைதொடர்ந்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடியில் அவன்  கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினான்.

இந்த இரண்டு தாக்குதல்களிலும் சுமார் 52 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதில் ஈரானியர்கள் நான்கு பேர் பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த 91 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தகவலை அம்மாகாண துணை மருத்துவ அதிகாரி உறுதிசெய்தார்.