டெல்லியில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

56

கடந்த பல மாதங்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் பல கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமும் நூதன போராட்டங்களை நடத்தி வரும் அவர்கள் நேற்று பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ‘மோடியே மோடியே எங்களை பிச்சை எடுக்க வைத்து விட்டாயே’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.