ஆதாரை லைசன்ஸுடன் இணைக்கும் புதிய திட்டம்

84

ஆதார் எண்ணை பேன் கார்டுடன் இணைக்கவும், மொபைல் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அதன் முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தொடுக்கப்பட்ட வழக்கில், மக்களுக்கு தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச் தெரிவித்தது.

இது மத்திய அரசின் முயற்சிகளுக்கு தடையை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில், “ஆதார் அட்டை மக்களின் டிஜிட்டல் அடையாளம் தான். நிஜ அடையாளம் அல்ல. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு இதற்கு ஒத்துவராது,” என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அடையாள எண்ணை இணைக்க, போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.