கமல் கட்சி ஆரம்பிப்பதில் தவறில்லை- கனிமொழி

71

திமுக கட்சியைச் சேர்ந்த கனிமொழி எம்.பி இன்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். நவோதயா, எடப்பாடி பழனிச்சாமி, ஜாக்டோ-ஜியோ, கமல் அரசியல் வருகை குறித்துப் பேசினார். அப்போது, ” இந்தி திணிப்புக்கு வழி வகுக்கும் என்பதால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்புக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். . தமிழக மக்களுக்கு என்று எதுவும் செய்யாத பா.ஜனதா அரசு இதில் மட்டும் ஏன் அக்கறை செலுத்துகிறதென்று தெரியவில்லை.

ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தத்தினைக் குறிப்பிட்டு நடிகர் கமல்ஹாசன், வேலை செய்யாத எம்.எல்.ஏ.க்களின் சம்பளங்கள் எல்லாம் ரத்து செய்யப்படுமாயெனக் கேள்வி எழுப்பிருக்கின்றார். மக்கள் பணி செய்யாத அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை அடுத்த முறை மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பு குழுவின் போராட்டம் நியாயமானது. அதனை புரிந்து கொண்டு அரசு நியாயம் வழங்க வேண்டும். அதை விடுத்து போராட்டத்தை தடுக்க நினைப்பது தவறானது ஆகும்.

7 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதனால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பதில் தவறில்லை.எடப்பாடி பழனிசாமி இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வீட்டுக்குச் செல்வார் என டி.டி.வி.தினகரன் கூறுகிறார். மக்களுமே அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.