இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

84

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அளித்த பேட்டியில், “வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் தேவாலா பகுதியில் 4 செமீ, திருப்புவனத்தில் 3 செமீ, வால்பாறையில் 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது” என்றார்.