ட்ரம்பின் ட்வீட் பதிவுகளுடன் வலம் வரும் காலணிகள்

83

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்வீட் பதிவுகளைக் கொண்ட காலணிகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலணிகள் ட்ரம்ப்பைப் பெருமைப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்றும் மாறா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்யும் விதமாக அவரது கீச்சகப் பதிவுகளை அச்சிட்டு காலணிகளை வெளியிட்டு வருகிறது அந்தக் காலணி நிறுவனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் முரண்பட்ட கருத்துக்களை அச்சிட்டு அந்தக் காலணி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த காலணிகளின் மேல் பட்டைகளில், வலது காலணியின் பட்டையில் ஒரு கருத்தும் இடது காலணியின் பட்டையில் எதிர் கருத்தும் இருக்கும்படி அச்சிடப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று விதமான கருத்துகளை கொண்ட காலணிகள் விற்பனைக்கு வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.