மொசூலில் பாடசாலையொன்றின் மீது தாக்குதல்

77

ஈராக்கின் முக்கிய நகரான மொசூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் 12 இராணுவத்தினர் உள்ளடங்குகின்றனர்.

மொசூலில் உள்ள பாடசாலையொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையொன்றில் முகாம் அமைத்து தங்கியிருந்த இராணுவத்தினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் 23 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.