ஆங் சான் சூகிக்கு கடும் எச்சரிக்கை

236

ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த மியான்மரின் மக்கள் தலைவர் ஆங் சான் சூகிக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ரொஹிங்கிய தீவிரவாதிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து மியன்மாரின் ரக்ஹெய்ன் பிராந்தியத்தில் மியன்மார் இராணுவத்தினர் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் காரணமாக லட்சக்கணக்கான ரொஹிங்கியர்கள் மியன்மார விட்டு அகதிகளாக வெளியேறிவருகின்றனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் நம்பகத்தன்மை நிறைந்த பல தரவுகள் சர்வதேச பொதுநல அமைப்புக்களால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மியன்மாரில் இடம்பெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு மியன்மாரின் மக்கள் தலைவரான ஆங்சான் சூகியிடம் தொடர்ச்சியாக கோரி வந்தது.
எனினும், இந்த கோரிக்கைக்கு ஆங்சான் சூகி சார்பில் எந்த பதில் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ், ஆங்சான் சூகிக்கான இந்த இறுதி வாய்ப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.