சவுதி அரேபிய அரச குடும்பத்தவர்கள் உள்ளிட்ட பலர் கைது

83

சவுதி அரேபிய அரசுக்கு எதிராக, வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்த குற்றச்சாட்டில் அந்த நாட்டு அரச குடும்பத்தவர்கள் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவின் அரசராக முகமது பின் சல்மான் செயற்பட்டுவருகின்றார்.
அரசின் பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு பதிலாக அரசர் முகமது பின் சல்மானின் மகன் முகமது பின் சல்மான் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அத்துடன் துணை பிரதமர் பதவியும் இராணுவம், எண்ணெய்வளம் உள்ளிட்ட பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதன் பின் சவுதியில் மிகவும் சக்திவாய்ந்த அரச குடும்ப வாரிசாக அவர் மாறினார்.
இந்த நிiலையில் அவர் சவுதி அரேபியாவில் மேற்கொண்ட நிர்வாக செயற்பாடுகளினால் அவர் மீது பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
முன்னாள் பட்டத்து இளவரசரான முகமது பின் நயீப்புக்கு ஆதரவு தெரிவித்தும் பல தற்போதைய பட்டத்து இளவரசருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை வெளியிட்ட மதகுருமார்கள், கல்வியாளர்கள், கவிஞர், பொருளாதார நிபுணர்கள், இளைஞர் அமைப்பின் தலைவர் பல முக்கியஸ்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர,  இளவரசர் ஒருவரும், முன்னாள் அரசரின் மகன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டு அமைப்புக்களுடன் இணைந்து சவுதி அரேபிய அரசை கவிழ்க்க முயற்சித்ததாக அந்த நாட்டு அரச தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.