இலங்கை; மட்டக்களப்பில் மர்ம காச்சல் – சிறுமி பலி

45

அற்புதன் கிருபைராணியின் தம்பதியின் இரண்டாவது மகளான கிதுசா (வயது 9) என்ற சிறுமிக்கு 16/09 அன்று காலை காய்ச்சல் ஏற்பட, சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருந்தெடுத்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் (17/09) காய்ச்சல் குறைந்திருந்த போதும் சிறுமிக்கு, அதிகரித்த களைப்பு காணப்பட்டுள்ளது.

மதியம் 01.30 மணியளவில் சோறு உட்கொள்ள கொடுத்தபோது சிறுமி வாந்தி எடுத்து மூக்கினாலும், வாயினாலும் சளி வெளியாகி சோர்வுற்றதால் உடனடியாக மீண்டும் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டுவரும்போது வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமி, தாயின் வயிற்றிலிருக்கும்போதே தந்தையை இழந்தவர். மேலும் தாய் தற்போது சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார்.

இதன் காரணமாக சிறுமி அம்மம்மாவின் பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளார்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படிருக்கிது.

பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்தான் மரணத்திற்கான காரணம் வெளிவரும் என நம்பப்படுகின்றது.

எப்பொழுதும் எமது பொதுமக்களிடம் ஒரு குணம் உள்ளது ஏதாவது நோய் உருவாகினால் ஊர், சுற்றியுள்ள அயலூர் தனியார் வைத்தியசாலைகளில் மருந்தை பெற்று அதை ஒழுங்குமுறையாக குடிப்பதில்லை காலையில் ஒரு வைத்தியரிடம் மாலையில் இன்னும் ஒரு வைத்தியரிடம் மருந்தை வாங்குவதிலே குறிக்கோளாக இருப்பார்கள்,

 நோயாளி ஆபத்தான கட்டத்தை அடைந்த பின் வைத்தியசாலை சென்று மரணமடைந்தால் எமது பொது தரப்பினரின் கவனயீனத்தை மறைத்து வைத்தியசாலை தரப்பு மீது இலகுவாக குற்றத்தை சுமத்தி இலகுவாக தப்பித்து போகும் மனநிலை உருவாகியுள்ளது. 

பழி போடுவதை விடுத்து வரும் முன் காப்பதே சிறந்தது!

இதே நேரம் தன்னாமுனை தொடங்கி வாழைச்சேனை வரையான பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு முறையான சகல வசதி கொண்ட ஆதார வைத்தியசாலை இல்லாமை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தாவது எமது பகுதி அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை விட்டு நெருக்கடி கொடுப்பதில்லை இது இன்னும் வரும் எமது சங்கதியை அழிப்பதற்கு ஒவ்வானது.