மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

70

திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமேகலை என்ற பெண்மணி தனது குழந்தையுடன் முழுஉடல் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்குள்ள மருத்துவ உதவியாளர் சுமித்ரா என்பவர் வேலை வாங்கித் தருவதாக கூறி வழக்கறிஞர் மணிமேகலையை அடையாளம் காட்டினார். வேலை வாங்கித் தருவதாக கூறி, வழக்கறிஞர் மணிமேகலை குழந்தையின் தாயாரை பார்க்க வந்துள்ளார்.

பின்னர் யாரும் கவனிக்காத நேரத்தில் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து குழந்தையின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையிலும் வழக்கறிஞர் மணிமேகலை தான் இதில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியானது. அவருடைய மொபைல் எண்ணை வைத்து 3 பேரையும் போலீசார் கண்டுபிடித்து குழந்தையை சேலத்தில் மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.