ரெடியா இருங்க ஆர்மி. ஓவியா இஸ் கமிங் ஸூன்…

406

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், நடிகை ஓவியா புகழின் உச்சிக்கு சென்று விட்டார். தமிழகம், ஏன் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தீவிர ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். ஓவியாவின் இந்த புதிய புகழை பயன்படுத்திக் கொள்ள, பட நிறுவனங்கள் அவர் வீட்டு வாசலில் கியூவில் நிற்கின்றன.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில், ஓவியாவுக்கு ஒரே அன்புத் தொல்லை தான். அவரை பற்றி பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள ரசிகர்கள், தங்கள் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளிக்க ஓவியவிடம் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அதுகுறித்து ஓவியா பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “ரசிகர்களிடம் இருந்து லைவ் சேட் செய்ய கோரிக்கைகள் பல வந்துள்ளன. உங்களை போல நானும் ஆர்வமாக உள்ளேன். ஆனால், பிக் பாஸின் 100 நாட்கள் முடியும்வரை காத்திருங்கள். பின்னர் சேட் செய்யலாம்,” என எழுதினார்.