குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை; திருமுருகன் காந்தி

69

இலங்கை இறுதிப்போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் மே மாதம் நினைவேந்தல் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் மெரினாவில் அனுமதியின்றி இது போன்ற நிகழ்வுகளை நடத்த காவல் துறை தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தடையை மீறி மே 17 இயக்கம் சார்பில் மெரினாவில் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன் மற்றும் அருண் குமார் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதை எதிர்த்து 4 பேரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இழுபறியில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இத்தோடு அந்த வழக்கையும் முடித்து வைத்தது.