இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தா அரசு வேலை கட்

82

அசாம் மாநிலத்தில் 2001ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.66 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்கின்படி, 3.2 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவியை இழக்க நேரிடும். தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கும் பதவி விலக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரு குழந்தைகள் திட்டத்தை பின்பற்றும் 12வது மாநிலம் அசாம் என்பது குறிப்பிடத்தக்கது.