பிக் பாஸ் ஓவியாவுக்கு வந்த தில்லு இதுதான்

256

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. ஆனால், சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல்; தன் மனம் போன போக்கில் செயல்படுகிறார்.

கேரளாவில்; தனது தோழியும்-நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டில் சில நாட்கள் ஓய்வில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன ஓவியா, இப்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். இதனால், ஓவியா ஆர்மியினர் செம குஷியாகியுள்ளனர். தங்களின் தலைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அதை வைரலாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஓவியா; வாய் திறந்தபடி இருக்கும் பெரிய முதலை மீது அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முதலை மீது ஓவியா அமர்ந்துள்ள புகைப்படத்தை ட்விட்டரில் போட்டுள்ள ஓவியா ஆர்மியினர் எங்க தலைவிக்கு தில்லு அதிகம்! என்கிற கமெண்ட்டையும் பதிவிட்டுள்ளனர்.