ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப்படுகொலை – கண்டன ஆர்ப்பாட்டம் – இளந்தமிழகம் இயக்கம் அழைப்பு

62

மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்தும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தியும் இளந்தமிழகம் இயக்கம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய அரசே,

* மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு!
* தஞ்சம் புகும் ஏதிலியர்களை வெளியேற்றாதே!
* மியான்மருக்கு இராணுவ உதவி வழங்காதே!

என்ற முழக்கங்களை இந்திய அரசை நோக்கி முழங்குவோம்.

ஈழத்தில் நம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்திட்ட அதே, பௌத்த பேரினவாதம், வல்லாதிக்கம், இன்று மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்துகொண்டுள்ளது. நம் கண் முன்னே நம் சொந்தங்களை பேரினவாதத்துக்கு பாலி கொடுத்த நம்மால் ஒருபோதும் இனப்படுகொலையை வேடிக்கை பார்க்க இயலாது. ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த ஒன்று கூடுவோம். ஏதிலியராய் இந்திய நாட்டிற்கு வந்த மக்களை பாதுகாக்க ஒன்று கூடுவோம்.

அனைவரும் வருக!

பேச : 9941931499, 9791016262.
இடம் : வள்ளுவர் கோட்டம்.
ஒருங்கிணைப்பு : இளந்தமிழகம் இயக்கம்.