டெங்கு காய்ச்சல்; தமிழகத்தில் 15 பேர் பலி

80

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘இந்தியாவில் கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொசுக்களை ஒழிக்க நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர்? டெங்குவுக்கு தமிழகத்தில் என்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்பது குறித்து தமிழக சுகாதார செயலர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இன்று சுகாதாரத்துறை சார்பில் அளித்த பதில் மனுவில், தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டெங்குவை அல்லாத மற்ற காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.