காதல் திருமணம் செய்த தம்பதிகள் ஒரே நாளில் தற்கொலை

113

ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதிகள், ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்ற சந்தீப் மற்றும் மவுனிகா ஆகிய காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

முன்னதாக இவர்களின் திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொண்ட இவர்கள், வீட்டில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொள்வதாக எடுத்த முடிவை, தங்களது நண்பர்களுக்கு கைபேசியிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் சடலங்கள் வெட்டப்பலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இறந்தவர்களின் நண்பர்களிடம் காவற்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகிய ஒரே நாளில் காதல் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.