முருகப்பா குரூப்ஸ் தொழிலதிபர் எம்.வி முருகப்பன் மறைவு

358

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், கார்போரண்டம் யுனிவெர்சல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான எம்.வி முருகப்பன் நேற்று முன்தினம் காலமானார். 81 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய் கிழமை இரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆரம்ப காலத்தில் கட்டுமான துறையில் பணியாற்றிய முருகப்பன் பின்னர் கோரமெண்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1979-ஆம் ஆண்டு கார்போரண்டம் யுனிவெர்சல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். 1995 – 2004 வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பு வ வகித்தார். 2004-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், தனது மனைவி, மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது இறுதி சடங்கு நேற்று திருவொற்றியூரில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.