ஜியோவின் புதிய ஆஃபர்

76

ஜியோ சில வாரங்களுக்கு முன்புதான், ‘தன் தனா தன்’ என்ற பெயரில் ஆஃபரை அறிவித்தது. ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களும் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக மொபைல் டேட்டா சலுகைகளை வழங்கி வருகின்றன. தற்போது, பண்டிகை காலத்தையொட்டி, ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 4G Hotspot உடன் கூடிய ஜியோ ‘வை-ஃபை’ 50 சதவிகித தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

* 32ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்ட JioFi M2S model ‘வை-ஃபை’ மோடத்தின் அசல் விலை ரூ. 1,999 ஆகும். தற்போது 50 சதவிகித சலுகையில் ரூ.999க்கு விற்கப்படுகிறது.

* செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை 11 நாட்கள் இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஜியோ நிறுவனத்தின் இணையதளமான Jio.comக்கு சென்று இந்த மோடத்தை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

* ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு உள்ளது. இதைத்தவிர அனைத்து ரிலையன்ஸ் மற்றும் ஜியோ ஸ்டார்களிலும் கிடைக்கும்.

* உங்கள் ஆதார் அட்டை நகலை அடையாள ஆதாரத்திற்க்காக கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும்போது டெலிவரி செய்யும் நேரத்தில் ஆதார் நகலை கொடுத்தால் போதுமானது.

* ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்த நாளில் இருந்து 3-5 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

* ஜியோ ‘வை-ஃபை’ மூலமாக கணினி, மொபைல் போன், டிவி, டேப் உள்ளிட்ட 32 மின்னணு சாதனங்களை இணைத்து இணைய வசதியை பெற முடியும்.

* மோடத்தில் உள்ள சிம்மை உங்களது மொபைல் போனிலும் உபயோகித்துக் கொள்ளலாம். ஜியோ 4ஜி வாய்ஸ் ஆப்பை இன்ஸ்டால் செய்தால் வாய்ஸ் கால் வசதி பெற்று கொள்ளலாம். இதற்காக கூடுதல் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை.

* மேலும் இதில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு 2 ஜிபி வீதம் 6 மாதத்திற்கு மொத்தம் 12ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படும்.

* இது 2300mAh பேட்டரி வசதியுடன் இருப்பதால் 5 முதல் 6 மணி நேரம் வரை தாராளமாக உபயோகிக்கலாம்.

* ஒரு வருடம் வாரண்டி கொடுக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் ஏதும் கோளாறு ஏற்பட்டால் ரிலையன்ஸ் ஸ்டாரை தொடர்பு கொள்ளலாம்.

* மேலும், மோடத்தில் ஏதுனும் கோளாறு இருந்தால் வாங்கிய 10 நாட்களுக்குள் இந்த மோடத்தை கொடுத்து விட்டு மாற்றம் செய்து கொள்ளலாம்.