வெளியானது விஜயின் ‘மெர்சல்’ டீசர்

107

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன் வௌியானது.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது.

இதில், முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு தனியாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கவுள்ளது.

இதுவரை வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன் சிங்கிள் டிராக் போன்றவை சாதனை படைத்த நிலையில், தற்போது வௌியாகியுள்ள மெர்சல் டீசரும் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.