டிரம்ப் ஒரு பைத்தியம் – வடகொரிய அதிபர் கிம்

133

உலக நாடுகளின் கண்டனங்களை மீறி, தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்திவரும் வடகொரியாவை டிரம்ப் ஐ.நா மாநாட்டில் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து அமெரிக்காவை அச்சுறுத்தி வந்தால், வடகொரியாவை வேரோடு அழித்துவிடுவோம் என டிரம்ப் கூறினார். கிம் ஜாங் ஊனை ‘ராக்கெட்மேன்’ என அழைத்து விமர்சனம் செய்தார். இதைத் தொடர்ந்து, வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க டிரம்ப் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், டிரம்ப்பின் எச்சரிக்கைகளுக்கும், பேச்சுக்கும் பதிலடி கொடுக்குமாறு, அவரை பைத்தியம் என கிம் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கர போர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றும் அவர் எச்சரித்தார்.