விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு

85

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்தக்கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் தலைமையில் மாநில சுயாட்சி மாநாடு இன்று நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட சில முக்கிய கட்சிப் பொறுப்பிலுள்ளவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தல், மத்திய -மாநில அரசு உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்தல், கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநில பட்டியலில் சேர்த்தல், சர்வாதிகார ஆட்சிகளை நடத்த முயற்சிக்கக் கூடாது. தமிழை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.