ஊபர் நிறுவனத்தின் உரிமத்தை நீட்டிக்க மறுப்பு

67

பிரபல ஆன்லைன் கார் சர்வீஸ் ஊபர். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிற இந்த நிறுவனமானது இந்தியா உள்பட பல நாடுகளில் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் லண்டனில் இந்த நிறுவனம் வாங்கி வைத்திருந்த உரிமம் வரும் 30ம் தேதியோடு முடிவடைகிறது.

ஆனால், ஊபரின் அணுகுமுறை திருப்தி அளிக்கவில்லை என்றும், நம்பகமாக இல்லையென்றும் பல காரணங்களை தெரிவித்து அதற்கு உரிமத்தை நீட்டிக்க மறுத்து வருகிறது.

இந்த முடிவையடுத்து ஊபர் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.