மருத்துவ மாணவர்கள் தொடர் உண்ணாநிலை

2566

சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழகத்திலுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 24 நாட்களாக மருத்துவக் கல்லூரி முன்பும் சென்னை, சிதம்பரம் என்று பல்வேறு இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மாணவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காணவேண்டியும் போராட்டத்தின் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (செப்.22) மாணவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் முன் அமர்ந்து இரவு, பகல் பாராமல் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.