விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி – சி 39 ராக்கெட்

93

இந்தியாவின் முதல் தனியார் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 எச் செயற்கைக்கோளுடன் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி – சி 39 ராக்கெட் கடைசி தருணத்தில் தோல்வியைச் சந்தித்தது. ராக்கெட்டில் இருந்த வெப்ப தகடுகள் பிரியாததே தோல்விக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இது விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர், கிரண் குமார், ராக்கெட் தோல்வி அடைந்தது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆய்வின் முடிவின் அடிப்படையில் அடுத்த முறை ஏவப்படும் போது தவறுகள் ஏதும் இல்லாதவாறு சரிசெய்யப்படும்.

ராக்கெட் அமைப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. செயற்கைக்கோளைத் தனியாக ராக்கெட்டில் இருந்து பிரிப்பதில் தான் தொழில்நுட்ப கோளாறு உள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த ராக்கெட்டானது மீண்டும் விண்ணில் ஏவப்படும் என்றார்.