H-1B விசா தொடர்பாக சுஷ்மா அமெரிக்காவில் பேச்சுவார்த்தை

71

ஐ.நா பொதுக்கூட்டத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன்னை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்தியர்கள் அமெரிக்கவிற்கு சென்று பணியாற்ற அதிகம் பயன்படுத்தும் H-1B விசாவின் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

இந்த கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டத்தை கைவிட சுஷ்மா டில்லர்சன்னை வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.