உசுப்பேத்திய சினேகன்… வெறுப்பேத்திய கமல்…!

126

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் மக்களிடம் உங்களது கையில் தான் வெற்றி உள்ளது. அது உங்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார்கள்? ஏன் ஜெயிப்பார்கள் என்றும், மற்றவர்கள் ஏன் ஜெயிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், வழக்கம் போல் சினேகன், கமலைப் பற்றி ஒரு பாடல் எழுதி அதனை கமல் முன்பு பாடிக் காட்டினார். அந்தப் பாடல் வரிகள், தலைவன் இருக்கிறான் வாடா.. என்று கமலின் அரசியல் பயணம் பற்றியதாகவும், அவர்; தலைவனாக வருவது பற்றிய புகழுரையாகவும், இதன் வழியாக சினேகன், மறைமுகமாக கமலை அரசியல் அழைக்கும் விதமாக கமலை உசுப்பேத்தினார்.

இந்த புகழ்ச்சிப் பாடலை பாடி முடித்தும் கமல், வானளாவப் பாராட்டப் போகிறார் என எதிர்பார்த்த சினேகன் எதிர்பார்ப்போடு இருந்தார். ஆனால், கமல் அதைப் பற்றி அலட்டிக்காமல் சினேகன் வெளிய  வாங்க பாத்துக்கலாம் என கூறினார்.