தடையில்லா மின்சாரம் – மோடி அறிவிப்பு

106

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த இந்திய மின்சக்தி மாநாட்டில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“செப்டம்பர் 25ல் மற்றுமொறு சவால் வருகிறது… நாடு முழுவதும் வருகிற 2019ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் 24 மணி நேர தங்கு தடையற்ற மின்சாரம் வருடம் முழுவதும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான “அனைவருக்கும் மின்சாரம்” என்ற திட்டத்தை செப்டம்பர் 25ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

அந்த வகையில் வருகிற 2019ல், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், மின் வசதி ஏற்படுத்தி தருவதே, இத்திட்டத்தின் இலக்கு. அனைத்து கிராமங்களிலும், மின் இணைப்பு கொடுப்பதற்காக, தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத. இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தொலை தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த எல்லா வீடுகளுக்கும் கூட மின் இணைப்பு வசதி கொடுக்கப்பட வேண்டும். அடுத்த கட்டமாக 24 மணி நேரமும், தடையில்லா மின்சாரம் கிடைக்க வழி வகை செய்யப்படும்” என்றார்.

செப்டம்பர் 25 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பண்டித் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த தினம். அன்றைய தினம் இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.