ஜெயலலிதா மரணம்; சிபிஐ விசாரணை வேண்டும்

84

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மீது எழுந்துள்ள சந்தேகத்தை போக்க, நீதிவிசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை கமிட்டியின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது மரணம் குறித்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் சென்று விசாரிக்க வேண்டிய நிலை வரும் என்பதால், இதற்கு சிபிஐ விசாரணை தான் உகந்தது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பொய் சொன்னது சமீபத்தில் தெரிய வந்தது. ஆனால் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சசிகலா வீடியோ எடுத்ததாகவும், அவர் நைட்டி அணிந்ததால் அதை வெளியிடவில்லை என்றும் தினகரன் இன்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, இன்று பா.ம.க கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை என்று கூறியுள்ளார். “மருத்துவமனையில் வைத்து ஜெயலலிதாவை வீடியோ எடுத்ததாக தினகரன் கூறுகிறார். அதில் அவர் மெலிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், ஜெயலலிதா மரணமடைந்தபின் பொதுமக்கள் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டிருந்தபோது அவர் மெலிந்ததாக தெரியவில்லை. வீடியோ எடுக்கவில்லை என சசிகலா முதலில் கூறினார். வீடியோ எடுத்ததாக தினகரன் கூறுகிறார். எது உண்மை என்று தெரியவில்லை. சிபிஐ விசாரணை மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் உண்மை கண்டறிய உதவும்,” என்றார்.