காஷ்மீரில் ஊடுருவ முயற்சித்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

81

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் உரி செக்டரில் ஜெய்ஷி முகமது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ஜவான்கள் 19 பேர் வீரமரணம் அடைந்தனர்.

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த ஆண்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி 40 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது.

இந்நிலையில் சர்ஜிகல் தாக்குதலுக்கு பலி வாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகள், எல்லையில் ஊடுருவ முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் உரி அருகே ஜோராவார் பகுதியில் இன்று பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.