ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

76

ஒடிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி சரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

அதே போல இந்த வழியாக புறப்பட்டுச் செல்லும் ரயில்களும் காலதாமதமாக புறப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.