ஆண்டவருக்கே ஆப்பு வைத்த அட்லீ…!!!

206

மெர்சல் படத்தின் கசிந்த கதை இதுதான்… கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய்க்கும், அவரது மனைவியான நித்யா மேனனுக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால், ஒரு குழந்தையை சிலர் திருடிவிடுகிறார்கள். அதன் பின்னர், விஜய்யும், நித்யா மேனனும் தங்களுக்கு ஒரு குழந்தை தான் பிறந்துள்ளது என்று நினைத்து அந்த குழந்தைக்கு மாறன் என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

இதையடுத்து, விஜய்யையும், நித்யா மேனனையும், ஊழல் செய்யும் மாவட்ட ஆட்சியரான எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டு தீர்த்துக் கட்டுகிறார். இதில், மாறன் மட்டும் தப்பிவிடுகிறார். திருடப்பட்ட மற்றொரு விஜய், மெர்சல் அரசனாக வடிவேலு-கோவை சரளாவிடம் வளர்ந்து வருகிறார். மாறன் மருத்துவம், அரசியல் என இரண்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். வடிவேலுவிடம் வளரும் மெர்சல் அரசன் விஜய் மேஜிக் கலைஞராகிறார். ஒரு கட்டத்தில், மெர்சல் அரசனுக்கு உண்மை தெரிந்து தன் அப்பாவை தீர்த்து கட்டியவர்களை தன்னுடைய மேஜிக் வித்தை மூலமாக கச்சிதமாக தீர்த்து கட்டிவிடுகிறார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்த கொலைப் பழி அனைத்தும் அண்ணன் மருத்துவர் மாறன் மீது விழுந்து விடுகிறது. தன்னுடைய சகோதரனை தான் நாம் பிரச்னையில் சிக்கவைத்து விட்டோம் என்று புரிந்துகொள்கிறார் விஜய். பிறகு எப்படி இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கள் மீது உள்ள நியாயத்தை கூறி தப்பித்துக்கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ். ஆனால், இந்த கதை உண்மைதானா? அபூர்வசகோதரர்கள் கதையை உல்டா செய்து கிளப்பிட்ட வதந்தியா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.

அட்லீ சார்… மௌனராகம், சத்திரியன் இந்த லிஸ்ட்டுல இப்போ அபூர்வ சகோதரர்களா… நல்லா செய்றீங்க..

ஆண்டவருக்கே ஆப்பா…!!!