ஜம்மு; பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினிடையே மோதல்

1366

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரில் எல்லை பகுதியில் சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் செயல்கள் அதிகமாக காணப்படுகின்றன.

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணும் தனது பங்குக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் படையை சேர்ந்த வீரர்கள் குபுவாராவில் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுத்து விரட்டியுள்ளது.

இந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் தரப்பில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

தற்போதைய நிலவரப்படி எல்லை பகுதியில் இருதரப்பினருக்கும் இடையேயும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகின்றது.