ஜெயலலிதா விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை: பிரதாப் சி ரெட்டி

85

டெல்லியில் இன்று பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டது. எந்த அளவுக்கு சிகிச்சை சிறந்த முறையில் எங்களால் அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. மருத்துவமனையின் பாதுகாப்புக்காக வெளியில் தான் சிசிடிவி கேமரா வைத்துள்ளோம். அதன் காட்சி பதிவுகள் எங்களிடம் உள்ளன.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தேவைப்படும் போது விசாரணை கமிஷனிடம் எங்களிடம் உள்ள ஆதாரங்களை அளிக்கத் தயார். மேலும் நாங்கள் ஜெயலலிதா சிகிச்சை குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து விட்டோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள் வெளிப்படையாகவே இருக்கிறோம். எதையும் மறைக்கவில்லை. ” என்றார்.

பின்னர் மருத்துவமனையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்களா? என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, அவர் “இப்போதைக்கு எந்த பதிலும் அளிக்க முடியாது” என கூறி சென்று விட்டார்.