கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றில் ரன்வீர் சிங்

97

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனியை தொடர்ந்து தற்போது முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. 1983ம் ஆண்டு இந்திய அணி முதல் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அப்போதைய கேப்டன் கபில் தேவ் விளங்கினார். இதனால், கபீர்கான் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ’83’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க, ரன்வீர் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். பிஹாண்டோம் பிலிம்ஸ் படத்தை தயாரிக்க உள்ளது. அடுத்த ஆண்டு, படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் உலகில் தொடர்ந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகி வருகின்றது. சாய்னா நேவால், அபினவ் பிந்திரா, மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் அந்த பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நிலையில், கபில் தேவ் லிஸ்டின் புதிய வரவாக சேர்ந்துள்ளார்.