2 கோடி பார்வையாளர்களை பெற்ற ‘விஜய் 61’ படத்தின் டீசர்

89

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. ஒருபுறம் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த படத்திற்கு ‘மெர்சல் ’ என்ற தலைப்பை பயன்படுத்தட்ட ஐகோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.