பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்க்ரிப்ட் தான..? அடிச்சு கேட்டாலும் நோ

141

பிக்பாஸ் வீட்டிலிருந்து திரும்பியிருக்கும் சுஜா வாருணியிடம் அந்த நிகழ்ச்சியின் ரகசியம் என்ன? என கேட்பவர்களிடம் அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன் என எஸ்கேப் ஆகிறார்.

நடிகை சுஜா வாருணிக்கு, சினிமா தந்த செல்வாக்கைக் காட்டிலும்; பல மடங்கு புகழையும்-செல்வாக்கையும் பெற்றுத்தந்திருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. முன்பு சுஜாவை, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூட அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார்களாம்.

ஆனால்; பிக்பாஸ் வீட்டிற்குப் போய் திரும்பிய பிறகு எல்லோரும் தேடிவந்து பேசுகிறார்களாம். முன்பை விட; இப்போது சுஜாவிடமும் நல்ல மாற்றம் வந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நெருங்கிப் பழகுகிறாராம். அத்துடன், தான் வசிக்கும் ஃப்ளாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் ஓர்க் செய்து கொடுக்கிறாராம். இதனால்; அவர் வசிக்கும் ஏரியாவில் சுஜாவுக்கு மரியாதை கூடியுள்ளதாம்.

இப்பவாச்சும் சொல்லு சுஜா, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்க்ரிப்ட் தான..? என சிலர் ஆர்வமாக கேட்க; அதற்கு சுஜா, என்னையக் கோர்த்துவிடப் பாக்குறீங்களே? அத மட்டும் சொல்ல மாட்டேன். அடிச்சுக் கேட்டலும் சொல்ல மாட்டேன்.

அபூர்வ சகோதரர்கள் படத்துல கமல் சார் குள்ள அப்புவா நடிச்ச ரகசிய முடிச்ச எப்படி இன்னும் அவுக்க முடியலையோ; அது மாதிரி பிக்பாஸ் குடும்ப ரகசிய முடிச்சையும் அவுக்க முடியாது! என சாமர்த்தியமாக பதில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறாராம் சுஜா.