பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியா

250

கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்திற்கு நெருங்கியுள்ளது. இன்று யார் வெற்றியாளர் என்பது தெரியும் நாள் என்பதால் தமிழக மக்களே பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சினேகன், ஹரிஷ், கணேஷ் மற்றும் ஆரவ் ஆகிய நால்வரில் யார் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லப் போகிறார் என்பது மக்களின் வாக்குகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

இன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் இறுதி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தற்போது ப்ரோமோ படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிக் பாஸ் வீட்டினுள் ஓவியா மற்றும் அதில் பங்குகொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்கின்றனர். இது ஓவியா ஆர்மி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் என்று நம்புகிறோம்.

பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த வெற்றியாளர்.