திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு

75

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரியின் அளவு 10%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை 30%-ஆக இருந்த கேளிக்கை வரி தற்போது 20% குறைக்கப்பட்டு 10%-ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது செப்டம்பர் 27-ஆம் தேதியை முன்தேதியிட்டு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு 7% கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து கேளிக்கை வரி சேர்க்கப்படாமலேயே டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த கேளிக்கை வரியும் சேர்க்கப்பட உள்ளதால் டிக்கெட் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை நடைபெறும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.