கார் விபத்து… நடிகை வித்யாபாலன் உயிர் தப்பினார்!

200

பிரபல நடிகை வித்யாபாலன் சென்ற கார் திடீர் விபத்திற்குள்ளானது. அவருக்கு எந்த காயங்களும் ஏற்படாமல், பாலிவுட் நடிகை வித்யாபாலன், அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்தியில் வெளிவந்த தி டர்டி பிக்சர்ஸ், கஹானி ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். இப்போது அவர், தும்ஹரி சலூ என்கிற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள தும்ஹரி சலூ என்ற படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் பிசியாக உள்ளார் வித்யாபாலன்.

இந்தநிலையில், மும்பையில் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில், வித்யாபாலன் கார் சேதம் அடைந்தது. அவர், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.