வருங்காலத்தில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறையும்: ஜெட்லி

100

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் வருங்காலத்தில் குறைக்கப்படலாம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று கூறினார். கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரியை 5, 12, 18, 28 என நான்கு பிரிவுகளாக அரசு வசூலிக்கிறது. ஆனால், நாட்டின் பெரும்பாலான பொருட்கள் முதல் மூன்று பிரிவுகளின் கீழ் வந்துவிடும்.

ஜிஎஸ்டி-யால் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் பா.ஜ கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சனங்கள் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று ஒரு விழாவில் பேசிய நிதியமைச்சர் ஜெட்லி, இதே வரி விகிதங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்படாது, வருவாய் நடுநிலை (Revenue Neutral Plus) நிலைமை வரும் போது, வரி விகிதங்கள் குறைக்கப்படும், என்றார்.